சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார்கள் அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.பிரகதி:- இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் அதன் பிறகு தாரை தப்பட்டை திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரையிலும் நடித்து வருகிறார்.

ஸ்ரீது கிருஷ்ணன்:- இவர் குழந்தை நட்சத்திரமாக 90களில் அறிமுகமாகி அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் தற்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் வருகிறார்.
ஹேமலதா:- 90 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பல தொடர்களில் நடித்துள்ளார் நடிகை ஹேமலதா. இவர் மைக்கேல் தங்கதுரையுடன் ஜோடி நம்பர் ஒன் என்ற ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் வெற்றியாளராக கருதப்பட்டார்.
சாய் பல்லவி :- தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.
அதன் பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக நடிகை சாய் பல்லவி பிரேமம் திரைப்படத்தில் அறிமுகமானார். பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி.