தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அரவிந்த்சாமி இவர் 1970 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி பிறந்தார்.சிஷ்யா பள்ளியிலும் பின்னர் டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளும் பிஎஸ் முத்து மேல்நிலைப் பள்ளிகளும் பள்ளி படிப்பை முடித்தார்.அதன் பிறகு 1990 சென்னையில் லயோலோ கல்லூரியில் Commerce இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு இவர் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.இதை பார்த்து மணிரத்தினம் 1991 ஆம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

இப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அரவிந்தசாமி அறிமுகமானார். இவர் முதன்மை வேடத்தில் நடித்த முதல் படமானது ‘ரோஜா’ இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.இதைத் தொடர்ந்து ரோஜா,பாம்பே போன்ற படங்களுக்கு மாநில மற்றும் தேசிய திரைப்பட விருது விழாவில் விருதுகளையும் பெற்றார்.
இவர் தமிழில் பாசமலர் ,பாம்பே ,மின்சார கனவு ,இந்திரா ,போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு 2000ம் ஆண்டு முதல் நடிப்பை விட்டு பிற பிறகு தனது தொழிலை கவனித்து வந்தார்.தனது தொழிலை மட்டும் கவனித்து வந்தவர் 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.இதை தொடர்ந்து இவர் சதுரங்க வேட்டை ,தலைவி ,செக்கச் சிவந்த வானம் ,போகன் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.தற்போது ‘காவலில்’ என்ற படத்தில் ராஜு ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது மே 12 தேதி வெளியாக உள்ளது.
இவர் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சிகள் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். புதிய முகம் ,சிங்க அரசர் ,தில் சே, சைரா நரசிம்மா ரெட்டி போன்ற படங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் .இவர் இருவர், பேகன் போன்ற படங்களுக்கு பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம், இந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தொழிலதிபர், நடிகர் ,இயக்குனர் ,தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார் .நடிகர் அரவிந்தசாமி காயத்ரி ராமமூர்த்தி என்பவரை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆதிரா என்ற ஒரு மகளும் ருத்ரா என்ற மகனும் உள்ளார். பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர் .அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அபர்ணா முக்கர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது