தமிழ் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சீரியல் மூலம் பிரபலமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகளும் உள்ளனர்.அந்த வகையில் sun TV rai TV,jaya டிவிகளில் டிவிகளில் சீரியல்கள் நடித்த மக்கள் மதியின் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஷியாம் கணேஷ்.இவர் Coimbatore பூர்விகமாக கொண்டவர்.சின்னத்திரையில் பிரபலமானதை தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படம் ‘தீனா ‘இப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் தனது காலடி தடத்தை படித்தார்.

இவர் தமிழில் ஆனந்தம், யூத் ,மனசெல்லாம் ,மனதோடு மழைக்காலம் ,மிடில் கிளாஸ் மாதவன், திருமலை, ஒரு நாள் கனவு போன்ற பல படங்களில் நடித்துள்ளார் .நடிகர் ஷியாம் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் ஷியாம் சீரியல் நடிகை சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சிந்து விஜய்
டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.இவர் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான” தென்றல் சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார் .
இதை தொடர்ந்து சமீபத்தில் நிறைவு பெற்ற கலர்ஸ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே சீசன் ‘2 என்ற சீரியலில் ராஜேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார்.
இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவர் மகன் ஜோதிகா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘காற்றின் மொழி’ இப்படத்தில் ஜோதிகாவின் மகனாக நடித்துள்ளார் .
தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.