விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தீனா தற்பொழுது பல்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.இந்நிகழ்ச்சியில் தீனாவுடன் இணைந்து காமெடி செய்து கலக்கியவர் தான் சரத். இவர் பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்திரன் போன்றே இருப்பார். இவர் தீனாவுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் போல பேசி அசத்திய காமெடிகள் அதிகம் செய்திருப்பார்.

நடிகர் சரத் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகர் சரத். நடிகர் சரத் கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது நடிகர் சரத்தின்
மனைவியான கிருத்திகா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியலில் ஒன்றான சூப்பர்மாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.