Wednesday, April 2, 2025

நடிகை ஊர்வசியின் முன்னாள் கணவரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..?

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி இவரின் உண்மையான பெயர் கவிதா இரஞ்சனி.இவர் 1967ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி பிறந்தார். இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் தந்தை வி பி நாயர் தாய் விஜயலட்சுமி.இவருக்கு கலாரஞ்சினி மற்றும் கல்பனா என இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். இவர்கள் சில மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளன.

இவர் தனது ஆரம்பக் கல்வியை திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டை பெண்கள் சேவை உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரையிலும் படித்தார்.பின்னர் குடும்பம் சென்னைக்கு மாறியதால், கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் படித்தார்.அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் படிப்பைத் தொடர முடியவில்லை.

இவர் 1979 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான’ கதிர்மண்டபம்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.அதைத் தொடர்ந்து 1987 வெளியான திக் விஜயம் என்ற படத்தில் ஸ்ரீவித்யா நடன மாணவியாக நடித்தார்.

1983 ஆம் ஆண்டு நினைவுகள் மறைவதில்லை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் இப்படம் வெளிவரவில்லை.1983 ஆம் ஆண்டு வெளியான கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து 1986இல் வெளியான ‘தொடரும் உறவு’ படத்தில் கார்த்திக்கு கதாநாயகியாக நடத்தியிருந்தார். அப்போது அவருக்கு வயது 13.

இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் , ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிப்படங்களில் சுமார் 702 படங்களில் நடித்துள்ளார்.நடிகை ஊர்வசி மலையாள நடிகரான மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதன் பிறகு இருவரின் மன கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர்.அதன் பிறகு தொழிலதிபரான சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது .தற்போது ஊர்வசியின் முன்னாள் கணவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular