தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக பலம் வந்தவர் விவேக். தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் பேவரட் காமெடியனாக திகழ்ந்தவர் இவர்.இவர் மாரடைப்பு காரணமாக கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அவர் குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தவர்.இயற்கையை நேசித்த இயற்கையின் பாதுகாவலராக விளங்கியவர் நடிகர் விவேக்.

அவர் இந்த மண்ணை விட்டு சென்றாலும் மக்களின் மனதை விட்டு இன்னும் செல்லவில்லை.இவர் இறுதியாக சங்கர் இயக்கத்தில் தயாரான இந்தியன் 2 திரைப்படத்தில் முதல்முறையாக உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து பணியாற்றி வந்த நிலையில் படம் முடிவதற்கு முன்னரே அவர் உயிரிழந்து விட்டார்.அவரின் மறைவுக்குப் பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த அரண்மனை 3 திரைப்படம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு விவேக் நடித்திருந்த தி லெஜண்ட் திரைப்படமும் வெளியானது.அந்தத் திரைப்படத்தில் சரவணன் அருளுடன் இணைந்து விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.விவேக் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக இருந்து வந்தவர்.
இவர் பத்மஸ்ரீ, கலைமாமணி, எடிசன் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.இவர் அங்கையா மற்றும் மணியம்மாள் தம்பதியரின் மகன் ஆவார். இவர் திருமண வாழ்க்கையை பொருத்தவரையில் அருள் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தன. தேஜஸ்னி மற்றும் அமிர்தா நந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.இவரின் மகன் பிரசன்ன குமார் டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு 13 வயதில் உயிரிழந்து விட்டார்.தற்போது விவேக்கின் பலரும் பார்த்திடாத குடும்ப புகைப்படங்கள் மற்றும் அன்சீன் புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.