Monday, April 7, 2025

முதல்முறையாக மகள், மகன் புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி.. ரசிகர்கள் வாழ்த்து..!

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 80 கள் மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஊர்வசி தனது மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை முதன் முதலாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.கே பாக்யராஜ் இயக்கி நடித்த ’முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை ஊர்வசி. அதன் பிறகு அவர் கமல்ஹாசன் நடித்த ’மைக்கேல் மதன காமராஜன்’ ’அந்த ஒரு நிமிடம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் கடந்த 80கள் மற்றும் 90களில் தமிழ் மலையாள திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட அவர் பிஸியாக உள்ளார் என்பதும் ’யானை முகத்தான்’ உள்பட ஐந்து படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஊர்வசி மலையாள நடிகர் ஜெயன் என்பவரை கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2001 ஆம் ஆண்டு தேஜா லட்சுமி என்ற மகள் பிறந்தார். இதனை அடுத்து ஜெயனை விவாகரத்து செய்த ஊர்வசி பின்னர் சென்னை சேர்ந்த சிவப்பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் முதன் முதலாக தனது மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA