Wednesday, April 2, 2025

பிரபல தமிழ் வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகத்தினர்…!

- Advertisement -
- Advertisement -

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கசான் கான் மராடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இதை புரோடக்ஷன் கன்ட்ரோலர் என் எம் பாதுஷா சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொண்டார்.
கசான் கான் 1992இல் செந்தமிழ் பாட்டு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வானத்தை போல, வல்லரசு, முறைமாமன் என பல முன்னணி படங்களில் வில்லன் வேடங்களை ஏற்று நடித்து புகழ்பெற்றுள்ளார்.

மலையாள திரையுலகில் கந்தர்வம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், வர்ணபாகிட், தி கிங், தி கேங், சிஐடி மூசா, ட்ரீம்ஸ், தி டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2003இல் மலையாளத்தில் வெளிவந்த சிஐடி மூசா படத்தில் இவர் ஏற்று கதாபாத்திரம் சிறந்த வரவேற்பை பெற்றது.

அத்துடன் தெலுங்கு, கன்னடா என தென்னிந்திய திரையுலகில் சுமார் 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடித்து வந்த 2015இல் லைலா ஓ லைலா என்ற படத்தில் கடைசியாக நடித்தார். கசான் கான் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular