விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’களும் சரி, கோமாளிகளும் சரி நான்ஸ்டாப் காமெடி செய்து வருவதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில நேரம் யார் குக், யார் கோமாளி என்றே தெரியாமல் இரு தரப்பினரும் காமெடியில் கலக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ’குக்’கள் மற்றும் கோமாளிகளுக்கு இணையாக காமெடி செய்து வருபவர்கள் நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு என்ற தாமோதரன் என்பது தெரிந்ததே.இருவரும் அவ்வப்போது கொடுக்கும் கவுண்டர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும்
என்பதும் குறிப்பாக தாமுவின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரிக்கலாம்.இந்த நிலையில் தற்போது தாமு அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் அக்ஷயாவின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
தாமு மகள் அக்ஷயாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாமுவுக்கு இவ்ளோ அழகான மகளா? என்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.