Saturday, April 12, 2025

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச்சென்ற மூவர் கைது

- Advertisement -
- Advertisement -

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச்சென்ற மூவரை பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் 20மாடுகளையும் மீட்டுள்ளனர்

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்றுஅதிகாலை 4.30மணியளவில் பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் லொறி ஒன்றை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி 20மாடுகள் கொண்டுசெல்லப்படுகின்றமை கண்டறியப்பட்டது.

குறித்த வாகனத்தில் இருந்தவர்களை கைதுசெய்த பொலிசார் மாடுகளையும் பொலிஸ்நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

குறித்த மாடுகள் மல்லாவி பகுதியில் இருந்து குருநாகல் பகுதிக்குகொண்டுசெல்லப்படவிருந்ததாக தெரிவித்த பொலிசார் கைது செய்யப்பட்டவர்களை நாளையதினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular