வவுனியா வேப்பங்களும் பகுதியில் இல்லம் ஒன்றில் போதை மாத்திரை வியாபாரம் செய்யப்படுவதாக
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் (DCDB) பொருப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்திற்கிடமான குறித்த இல்லம் மீது திடீர் சுற்றிவைளைப்பை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர்
இதன்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 188 போதை மாத்திரைகளுடன் அதேபகுதியை சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்
முதற்கட்ட விசாரனைகளில் குறித்த போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
குறித்த நடவடிக்கையானது வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜயசோமமுனி அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொருப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்க அவர்களின் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க, அசங்க, மற்றும் பொலிஸ் கொன்ஸ்தாபில்களான சிந்நக்க, விதுசன், பொலிஸ் சாரதி திசாநாயக்க ஆகியோர் இணைந்து செயல்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது