Friday, March 7, 2025

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் 2021 ஆண்டு கஞ்சாவுடன் கைதான சட்டத்தரணி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு..!

- Advertisement -
- Advertisement -

மேன்முறையீட்டை அடுத்து பிணையில் விடுதலை!

வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டத்தரணி ஒருவரை குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்று அவருக்கு 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்பளித்தது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

கடந்த 2021ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தபகுதியில் வைத்து இளம்சட்டத்தரணி ஒருவரிடம் சோதனை நடாத்தப்பட்டது.

இதன்போது அவரது உடமையில் கஞ்சா இருந்ததாக தெரிவித்து குறித்த சட்டத்தரணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்தது. இந்நிலையில் இன்றையதினம் அதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக சட்டத்தரணியை குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம் அவருக்கு 10ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தது.

இதேவேளை குறித்த சட்டத்தரணி மேன்முறையீடு தொடர்பான அறிவித்தலை நீதிமன்றில் வழங்கியதன் பிரகாரம் மேன்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதன் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular