Saturday, March 8, 2025

வவுனியா – செட்டிகுளத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்..!

- Advertisement -
- Advertisement -

செட்டிகுளம் – அரசடிக்குளம் பகுதியில் மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சிவதீசன் வயது 43 என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular