Sunday, March 9, 2025

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு

- Advertisement -
- Advertisement -

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று (22) முதல் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்தப் பொருட்களைப் பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நிலக்கடலை கிலோ கிராமின் விலை, 100 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 995ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு சீனி கிலோ கிராம் ஒன்றின் விலை, 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 300 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு(இறக்குமதி செய்யப்பட்டது) ஒரு கிலோ கிராமின் விலை, 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 180 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு கௌபி கிலோ கிராம் ஒன்றின் விலை, 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 765 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்ந்த மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை, 15 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 830 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்மதி அரிசி ஒரு கிலோ கிராமின் விலை, 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 645 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் விலை, 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 230 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 288 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை சீனி கிலோ கிராமின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 240 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

நெத்தலியின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக விலை 940 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular