Sunday, March 9, 2025

வெள்ளத்தில் முழ்கியது குடிவரவு குடியகல்வு திணைக்கள வவுனியா பிராந்திய அலுவலகம்..!

- Advertisement -
- Advertisement -

வவுனியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வெள்ளத்தில் முழ்கியதால் அதன் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று (22.01) காலை முதல் கன மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக வெள்ள நீர் காரணமாக வவுனியா குடிவரவு குடியகல்வு பிராந்திய அலுவலகத்திற்குள் வெள்ள நீர் புகுந்த வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இதனால் அதன் கடவுச் சீட்டு விநியோக செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன், அலுவலகத்தில் கடமையாற்றுவோர் வெள்ளத்திற்குள் நின்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த நீரை வெளியேற்றுவதற்கு அலுவலக உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA