Monday, April 28, 2025

வவுனியா நெளுக்குளத்தில் 12 வாகன பற்றரிகளுடன் ஒருவர் கைது..!!

- Advertisement -
- Advertisement -

வவுனியா நெளுக்குளம் பகுதியில் 12 வாகன பற்றரிகளை மகேந்திரா ரக வாகனத்தில் ஏற்றிச்சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் குறித்த வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நெளுக்குளம் பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போதே குறித்த மகேந்திரா ரக வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய போது வாகனத்தில் 12 வாகன பற்றரிகளை மீட்டெடுத்துள்ளனர். குறித்த வாகன பற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்தமையுடன் அவ் வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

வாகன உரிமையாளர்கள் பற்றிரிகள் எவையும் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ முறைப்பாட்டினை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த நான்கு வாரத்திற்கு முன்னர் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில வாகன பற்றரிகளை களவாடிய குற்றச்சாட்டில் நான்கு வாகன பற்றரிகளுடன் இருவரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular