வவுனியா ஏ9 வீதி தேக்கவத்தை பகுதியில் இரானுவத்தினரின் பேரூந்தும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகருடாக பயணித்த இரானுவத்தினரின் பேரூந்து தேக்கவத்தை ஆடைத்தொழிற்சாலையினை அண்மித்த பகுதியில் வீதியின் மறுபக்கத்தில் வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரானுவத்தினரின் பேரூந்து முன்னைய சென்ற வாகனத்தினை முந்திச் செல்ல முற்பட்ட சமயத்திலிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டி பாரியளவில் சேதமடைந்துள்ளமையுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.