Monday, March 31, 2025

வவுனியாவில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்

- Advertisement -
- Advertisement -

வவுனியாவில் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளது.வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் பகுதியிலுள்ள வீட்டின் சுவர் ஒருவர் விழுந்து இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

முல்லைத்தீவில் வசிக்கும் ச.சிந்துஜன் தனது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையுடன் வவுனியாவில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு கடந்த 7ஆம் திகதி வந்துள்ளார்.

நிகழ்வொன்றுக்காக வருகை தந்திருந்த நிலையில் தங்கையின் தற்காலிக வீட்டில் தங்கியிருந்த போது நேற்று (09.05) மாலை சுமார் 5 மணியளவில் வீட்டில் உட்பகுயில் உள்ள கற்சுவர் குழந்தையின் மீது விழுந்துள்ளது.

உடனடியாக வீட்டார் குழந்தையை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular