- Advertisement -
- Advertisement -
லங்கா உர கம்பனி லிமிடெட் மற்றும் கொழும்பு கொமர்ஷல் பெர்டிலைசர் கம்பனி லிமிடெட் ஆகியவற்றை இணைப்பதற்கான உத்தேச கட்டாய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு உர நிறுவனங்களின் நிதியில் இருந்து 844 மில்லியன் ரூபாவை செலவிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் இது தொடர்பான யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார்.
267 ஊழியர்கள் கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறையின் கீழ் ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, லங்கா உரக் கம்பனியின் இணைப்பு தொடர்பில் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
- Advertisement -