Friday, March 28, 2025

வவுனியாவில் தன்சல் வழங்கிய பொலிஸார்!

- Advertisement -
- Advertisement -

வெசாத் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிஸாரால் தன்சல் வழங்கல் வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிஸாரால் இன்று (23.05) தன்சல் வழங்கி வைக்கப்பட்டது.

வன்னி பிரதி பாெலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரதி பாெலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்னால் சவ்வரசி கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

இதன் பாேது வீதியால் சென்ற பலரும் வாகனங்களை நிறுத்தி சவ்வரசி கஞ்சியை பருகி சென்றிருந்தனர்.

இதனையடுத்து, வவுனியா தலைமை பாெலிஸ் நிலையத்தில் சமுதாய பாெலிஸ் குழுவின் ஏற்பாட்டில் இரண்டாயிரம் பேருக்கு சமைத்த உணவுப் பாெதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்பாேது வீதியால் சென்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்று சமைத்த உணவுப் பாெதிகளை பெற்றுச் சென்றனர்.

இந் நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பிரதி பாெலிஸ்மா அதிபர் சாமந்த விஜய சேகர, சிரேஸ்ட பாெலிஸ் அத்தியட்சகர் மாலன் அஜந்த பெரேரா, வவுனியா தலமை பாெலிஸ் நிலைய பாெறுப்பதிகாரி ஜெயக்காெடி, மதகுருமா, சமுதாய பாெலிஸ் குழு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து காெண்டனர். வீதியால் பயணித்த பல்லாயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பாதாசாரிகளுக்கும் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular