Friday, March 28, 2025

சீரற்ற வானிலை : 03 இலட்சம் பாவனையாளர்களுக்கு மின் துண்டிப்பு!

- Advertisement -
- Advertisement -

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட 36,900 க்கும் மேற்பட்ட மின்தடைகள் காரணமாக நாட்டில் 300,000 க்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பதிவு செய்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைகளைக் கவனிக்க கூடுதல் சேவை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு மின்சாரத்தை மீண்டும் வழங்க CEB நிர்வாகமும் சேவை ஊழியர்களும் 24 மணிநேரமும் உழைத்து வருவதாகவும் X இல் ஒரு பதிவை வெளியிட்டு அவர் கூறினார்.

CEBஇன் அவசர அழைப்பு 1987 மூலம் மின்சாரம் தடைபடுவதை நுகர்வோர் அறிவிக்க முடியாவிட்டால், அவர்கள் 1987 க்கு குறுஞ்செய்தியைப் பயன்படுத்தலாம். மேலும் CEB Care ஐப் பயன்படுத்தவும் அல்லது http://cebcare.ceb.lk மூலமாகவும் அணுகலாம் என அவர் தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular