பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் இன்று (23.05) இரவு 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தின் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது நாளை (24) வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பின்னர் அது வங்காள விரிகுடாவின் வடகிழக்கு நோக்கி மேலும் நகர்கிறது. அந்த நேரத்தில், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரேபிய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
மேலும் அறிவிப்பு வரும் வரை கீழே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு கடற்படையினர் மற்றும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக கரைக்கு வந்து மேலும் அறிவிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.