Friday, March 28, 2025

மர்மக் காய்ச்சல் : மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

- Advertisement -
- Advertisement -

மாத்தறை சிறைச்சாலையில் காய்ச்சல் காரணமாக கைதி ஒருவர் நேற்று (21.05) இரவு உயிரிழந்துள்ளார்.

சுமார் 03 மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர மாத்தறை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதியும் காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பரில் மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி பல மரணங்களும் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular