Friday, March 28, 2025

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!

- Advertisement -
- Advertisement -

வவுனியா ஓமந்தையில் முதிரை மரக்கடத்தலினை முறியடித்துள்ளதாக வவுனியா மாவட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா கல்மடுவில் இருந்து இரண்டு வாகனங்களில் கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகளை ஓமந்தை பகுதியில் உள்ள மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

இதன் போது மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 மரக்குற்றிகளும் கடத்தலுக்கு பயன்படுத்திய கப் மற்றும் பட்டா வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா மாவட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular