Friday, March 28, 2025

இலங்கை மீனவர்கள் 07 பேர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது!

- Advertisement -
- Advertisement -

கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி பகுதிக்கு அருகில் உள்ள இந்திய கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் குழு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீனவர்கள் வந்த கப்பலும் இந்திய கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடந்த 16ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்களும் 5 படகுகளும் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular