இலங்கை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உருவாகும் பருவமழைக்கு முந்தைய காலநிலை அம்சங்கள் காரணமாக இன்று (18.05) மாலை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை அறிக்கை மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அதேபோல் நாட்டின் ஏனைய பகுதிகளில் நண்பகல் 12 மணிக்குப் பின்னர் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும்.
நாடு முழுவதும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.