Friday, March 14, 2025

PhonePe டிஜிட்டல் கட்டண முறை இலங்கையில் அறிமுகம்!

- Advertisement -
- Advertisement -

இந்தியாவின் PhonePe டிஜிட்டல் கட்டண முறை நேற்று (15.05) கொழும்பில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமைப்பின் மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை செய்யலாம்.

இதன்போது உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா, “உங்களில் பலருக்குத் தெரியும், இந்தியா இலங்கையின் முன்னணி பொருளாதாரப் பங்காளியாகும்.

நாங்கள் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், அண்மைக் காலத்தில் இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலமாகவும் இருக்கிறோம்.

மேலும், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதில் இந்தியா பங்களித்துள்ளது.

இலங்கைக்கு மேலும், UPI, QR கட்டண முறையின் அறிமுகம் மூலம், இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு உதவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular