Friday, April 11, 2025

வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு: விடுதி முகாமையாளர் கைது!

- Advertisement -
- Advertisement -

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (15.05) தெரிவித்தனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது பெண் ஒருவரை வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்க்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு பாேதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாகவும், அதற்கு உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட 4 பேர் அண்மையில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா பொலிசார் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA