- Advertisement -
- Advertisement -
வவுனியாவில் பெய்த கடும் மழையின் காரணமாக வீதியோரங்களில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு கால்வாய்களில் தேங்கி காணப்பட்டது.
இதன் காரணமாக கால்வாய்களில் நீர் செல்லமுடியாமல் கால்வாய்க்கு வெளியில் சென்று வீதியால் நீர் வடியும் நிலை காணப்பட்டது. இந் நிலையில் நகரசபையின் சுகாதார தொழிலாளர்கள் கால்வாய்களை அடைத்த பிளாஸ்டிக்பொருட்களை அகற்றியிருந்தனர்.
இதேவேளை வயல்வெளிகளிலும் பிளாஸ்டிக்பொருட்கள் மழைநீரில் அடித்து வரப்பட்டமையால் வயல்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கியுள்ளமையை அவதானிக்க முடிந்தது.
நகர்ப்பகுதியில் பிளாஸ்டிக் பொருகளை போடுவதற்கு போதுமான கழிவு தொட்டிகள் இல்லாமையும் இதற்கு காரணமாக உள்ளது.
- Advertisement -