Monday, March 10, 2025

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு!

- Advertisement -
- Advertisement -

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் பின் பகுதியில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

மாங்குளம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

வவுனியா ஊர்மிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஆசீர்வாதம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற மேலதிக நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular