Monday, March 10, 2025

வவுனியாவில் போராட்டத்தில் இறங்கிய பல்கலைக்கழக ஊழியர் சங்கம்!

- Advertisement -
வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சம்பள உயர்வு கோரி இன்று போர்ட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பல்கலைக்கழக பூங்காவீதி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததன் பின்னர் அலுவலக வாயிலில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் புகையிரத வீதியூடாக பழைய பேருந்து நிலையம் வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது MCA கொடுப்பனவை அதிகரி, அரசே 107 வீத சம்பள அதிகரிப்பை வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கிவாறு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் சங்கமும் ஆதரவு வழங்கியிருந்தது.
- Advertisement -
RELATED ARTICLES

Most Popular