Saturday, March 15, 2025

வவுனியாவில் சிறைச்சாலைக்கு முன்பாக உணவகம் திறப்பு!

- Advertisement -
- Advertisement -

சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலைக்கு முன்பாக உணவகம் மற்றும் முடிதிருத்தும் நிலையம் என்பன இன்று திறந்துவைக்கப்பட்டது..

குறித்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் துசாரஉப்புல்தெனிய உணவகத்தினை உத்தியோகபூர்வமாக நாடாவெட்டி திறந்துவைத்தார்.

images/content-image/2024/05/1715419213.jpg

குறித்த உணவகத்தில் குறைந்தவிலையில் பொதுமக்கள் உணவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறைக்கைதிகளால் உருவாக்கப்பட்ட சிமேந்திலான சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான தங்கும்விடுதிக்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கப்பட்டது. நிகழ்வில் சிறைச்சாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள், வன்னிமாவட்ட இராணுவகட்டளைத்தளபதி, மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular