Monday, March 10, 2025

வவுனியாவில் பரீட்சை நேரத்தில் அடிதடியில் இறங்கிய மாணவர்கள்!

- Advertisement -
- Advertisement -

வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக நேற்று (10.05.2024) மதியம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில். நேற்றைய தினம்குறித்த பரீட்சை நிலையத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெற்றது. இந்நிலையில் அங்கு பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பாடத்தின் ஒருபகுதி நிறைவுற்றதுடன் நீண்ட நேரம் இடைவேளை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பரீட்சை மண்டபத்திற்கு வெளியில் ஒன்றுகூடிய இரு பாடசாலைகளை சேர்ந்த ஆண் மாணவர்கள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இதனால் குறித்த பகுதியில் சற்றுநேரம் குழப்பம் நீடித்ததுடன் போக்குவரத்தும் தடைப்பட்டது. இதனையடுத்து வீதியால் செல்பவர்கள் அங்கு ஒன்று கூடியமையால் குறித்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular