- Advertisement -
- Advertisement -
ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்காக இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தப்பிச் சென்ற இரண்டு இலங்கையர்கள் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர்.
அங்கு போர்க்களத்தில் காயம்பட்ட உறுப்பினர்களை மீண்டும் போர்க்களத்துக்கு அனுப்பும் நிலை இருப்பதாக அவர்கள் இதன்போது வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்கள், எங்களுடைய பொருளாதார பிரச்சனையால், நாங்கள் அத்தகைய இடத்திற்குச் சென்றோம், எங்களுக்கு எதுவும் தெரியாது, நாங்கள் ஒரு காட்டின் நடுவில் விடப்பட்டுள்ளோம்.
இது போரை விட தற்கொலை. நாங்கள் உக்ரைன் வீரர்கள் கட்டிய பதுங்கு குழிகளில் தங்குகிறோம். , நான் இலங்கையில் பயன்படுத்திய அனைத்து போர் தந்திரங்களையும் பயன்படுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -