- Advertisement -
- Advertisement -
வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை ஒன்றை நடாத்திய அதிரடிப்படையினர் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5கிலோ 124 கிராம் உடைய கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
வவுனியா செக்கட்டிப்பிலவு பகுதியை சேர்ந்த 26 வயதுடை இளைஞரே கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரனைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -