Monday, March 10, 2025

வவுனியா நெடுங்கேணி பகுதியில் சோகம்! ஒருவர் படுகொலை!

- Advertisement -
- Advertisement -

வவுனியா நெடுங்கேணி் கிரிசுட்டான் பகுதி வீடோன்றில இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நபரின் மனைவியான 37வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அண்மைகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

மனைவியின் சடலம் வவுனியா பொதுவைத்தியசலைக்கு கொண்டுவரப்பட்டு உடன்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் கணவனின் சடலம் விசாரனைகளின் பின்னர் உடற்கூற்றி பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரனைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular