Saturday, March 15, 2025

இலங்கையின் பெரும்பாலான இடங்களில் 50மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

- Advertisement -
- Advertisement -

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (30.04) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது.

திணைக்களத்தின் அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 50 மி.மீற்றர் கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular