Monday, March 10, 2025

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

- Advertisement -
- Advertisement -

எல்பிட்டிய – அவித்தாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றும் கொள்கலன் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 68 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் அவரது 10 வயது பேரனும், ஏழு வயது பேத்தியும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்தவரின் மனைவி, மகள் மற்றும் 18 வயது பேரன் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் கொள்கலன் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular