- Advertisement -
- Advertisement -
இன்று காலை 11 அலுவலக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து மொரட்டுவை, பாணந்துறை, வாதுவ, நீர்கொழும்பு, அம்பேபுஸ்ஸ, பாதுக்க மற்றும் ராகம ஆகிய பகுதிகளுக்கான புகையிரதப் பயணங்களும் அந்த புகையிரத நிலையங்களில் இருந்து மீண்டும் கோட்டை புகையிரத நிலையங்களுக்குச் செல்லும் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
- Advertisement -