Wednesday, March 19, 2025

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ஜி.சுகுணன் கடமையினை பொறுப்பேற்றார்!

- Advertisement -
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை , மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களின் இடம்மாற்றங்கள் இடம்பெற்றன. அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ஜி.சுகுணன் இன்று (03.04.2024) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டமையுடன் பின்னர் வவனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக தனது கடமைகளை ஆரம்பித்தார்.
புதிய பணிப்பாளர் ஜி.சுகுணன் இதற்கு முன்னர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
RELATED ARTICLES

Most Popular