- Advertisement -
- Advertisement -
பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் 04 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது, அதில் சுமார் 1.2 மில்லியன் வயது வந்த பெண் மாணவர்கள் உள்ளனர்.
மிகவும் கடினமான பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும் நகர்ப்புற வறுமைக் கோட்டுப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 800,000 மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் முன்மொழிந்துள்ளார்.
இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறுமிகளுக்கு 1,200 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -