Monday, March 17, 2025

வவுனியாவில் பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

- Advertisement -
- Advertisement -

மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA