- Advertisement -
- Advertisement -
உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காக போராடும் இலங்கையர்களில் 27 வயதான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுனா சில்வா என அழைக்கப்படும் இலங்கைப் பிரஜை, ரஷ்ய பதுங்கு குழியில் நடத்தப்பட்ட உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்த நிபுன சில்வாவை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயன்ற மற்றொரு இலங்கையரான சேனக பண்டாரவும் இதன்போது காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நான் நிபுனாவை அழைத்துச் செல்லும் போது, கடைசி பதுங்கு குழிக்கு அருகில் மற்றொரு பாரிய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்பட்டது.
- Advertisement -