Monday, March 17, 2025

மனித பாவனைக்கு உதவாத அத்தியாவசிய பொருட்கள் கண்டுப்பிடிப்பு!

- Advertisement -
- Advertisement -

கனேவல்பொல பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான ரொட்டி மாவு உள்ளிட்ட மனித பாவனைக்கு தகுதியற்ற பாவனை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பொருட்கள் சந்தையில் வெளியிட தயாராக உள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

25 மற்றும் 50 கிலோகிராம் கொண்ட 10,000 ரொட்டி மாவு பொதிகள் அங்கு காணப்பட்டதாக குறிப்பிட்ட அவர், மனித நுகர்வுக்கு தகுதியற்ற பருப்பு வகைகளும் அங்கு காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்யுள்ளார்.

கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட உடனடி சோதனையின் போது இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் ரொட்டி மாவில் நச்சுப் பொருள்கள் அடக்குமுறை செய்யப்பட்டு, காலாவதி திகதி மாற்றி, மீண்டும் அச்சடித்து, புதிய பொட்டலங்களில் பொதி செய்து மீண்டும் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பது சுகாதார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில்வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular