Monday, March 17, 2025

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டம்!

- Advertisement -
- Advertisement -

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

images/content-image/2024/03/1711786407.jpg

போராட்டத்தில் கருத்து தெரிவித்த அவர்கள்…

குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்கப்பெறாது. இதனால் சர்வதேச நீதியினைக்கோரி நாம் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம். எனவே சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும்.

எமது போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்வதற்காக பல அமைப்புக்கள் முற்படுகின்றன. எனவே குற்றமிழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தி எமக்கான நீதியை வழங்கவேண்டும். அதுவரையில் நாம் போராடிக்கொண்டே இருப்போம். என்றனர்.

images/content-image/2024/03/1711786456.jpg

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓ.எம்.பி கண்துடைப்பு நாடகம், சர்வதேச விசாரணையே எமக்கு தேவை, 12 ஆணைக்குழுக்கள் அமைத்தும் பயன் இல்லை என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular