- Advertisement -
- Advertisement -
நெடுங்கேணி பொலிஸ் நிலையம் முன்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மது அருந்திய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த பகுதிக்கு வருகை தந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரிடம், இவ்விடத்தில் மது அருந்தக் கூடாது என்பது தெரியாதா என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர், அதிகாரியை ஒருமையில் திட்டியதுடன், தான் பொலிஸ் அதிகாரி என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -