- Advertisement -
- Advertisement -
நாட்டில் வரி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த ஆண்டு முதல் வாகனங்கள் இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நிலையில், வாகனங்களின் தற்போதைய சந்தை விலை அதிகரிக்கும் என உள்ளூர் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய வாகனங்களை இறக்குமதி செய்ததன் பின்னர் வாகனங்களின் தற்போதைய உள்ளூர் சந்தை விலைகள் அதிகரிக்கும் என சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகன இறக்குமதியை படிப்படியாக அனுமதிக்க உத்தேசித்துள்ளதாக ஐக்கிய இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -