Tuesday, March 18, 2025

வவுனியாவில் திணம கழிவு சேகரிப்பு நிலையம் திறப்பு!

- Advertisement -
- Advertisement -

வவுனியா நகர சபையினால் வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் மரக்கறி விற்பனை சந்தைக்கு முன்பாக திண்ம கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

நகர சபையின் செயலாளர் இராசையா தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தபி.ஏ.சரத்சந்திர அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன், வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி வ.சுரேந்திரன், வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.கிருபாகரன், நகர சபை அலுவலர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையமானது அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையமானது வாரத்தின் ஏழு நாட்களும் மு.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை திறந்திருக்கும்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular