Tuesday, March 18, 2025

இலங்கையர்களுக்கு கண்நோய் ஏற்படும் அபாயம்!

- Advertisement -
- Advertisement -

நாட்டில் சமீப காலமாக மிதமிஞ்சி வெப்பநிலை பதிவாகி வருகின்ற நிலையில் தோல் சம்பந்தமான நோய்கள் குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கண்நோய் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன், விழிப்புலன் இழக்கப்படலாமென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர், கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், வெப்பம் காரணமாக கண் வறட்சி ஏற்படும் என்பதினால், தேவையான நீராகாரங்களை உட்கொள்வது அவசியமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுமெனவும் அவர் கூறினார். கணினி பாவனை அதிகம் உள்ள நபர்கள் மற்றும் ஏற்கனவே கண் நோய் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்கக் கூடுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular