- Advertisement -
- Advertisement -
அனுராதபுரம் ரம்பே பகுதியில் இன்று (09.03) காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
வீதியில் பயணித்த மக்கள் மீது கெப் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இசை நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிலர் விபத்தில் சிக்கியுள்ளனர்.
விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பெண்கள் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய கெப் வண்டி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகைளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -